செப்டம்பர் 1 முதல் இனி கோயில்களுக்குள் செல்போன் தடை..!
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோயில்களில் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அதிக கோயில் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் பல கோயில்கள் மிகவும் பிரபலமானவை. தவெக அரசு பொற்றுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றார். அவ்வப்போது கோயில்களிலும் ஆய்வு செய்து வருகிறார்.
ரீல்ஸ் மோகத்தால் பலரும் கோயில்களிலேயே வீடியோ பதிவு செய்து வெளியிடுவது வழக்கமாக வருகிறது. மேலும் சிலர் கோயில் கருவறையில் உள்ள கடவுளை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களின் உத்தரவின்படி திருக்கோயிலுக்கு வரும் நடிகர்கள்,நடிகைகள், முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்கள் வருகை குறித்து 1 நாளுக்கு முன்பாக ஆணையருக்கு விவரங்களை கோயில்கள் வழங்க வேண்டும். இது போன்றவர்கள் வரும் போது திருக்கோயில் வளாகத்தில் போட்டோ, வீடியோ போன்றவற்றிற்கு அனுமதி இல்லை.
கோயில்களில் தெய்வ சிலைகள், கருவறைகளை போட்டோ வீடியோ எடுப்பதை தடுக்கவும், கோயிலுக்குள் ரிலீஸ் போடுவதை தடுக்கவும், முதுநிலை திருக்கோயில்களில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் மொபைல் அனுமதி முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. அடுத்த 20 நாட்களுக்குள் முதுநிலை கோயில்களில் மொபைல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




