நடுக்கடலில் சென்ற கப்பல்.. நெஞ்சுவலியால் துடித்த சீனர்..!
சீனாவில் இருந்து அமீரகத்திற்கு பனாமா நாட்டில் வணிக கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அரபிக் கடலில் கடந்த புதன்கிழமை மும்பையில் இருந்து 2,200 மயில் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பலில் இருந்த சீன நாட்டைச் சேர்ந்த பணியாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவ மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு படை சென்று அங்கு சீன நாட்டவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நமது எல்லை பகுதியில் யார் அவதிப்பட்டாலும் காக்க வேண்டியது நமது கடமை என்று இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.






