--- --:--:-- --

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை..!

1

மிழகத்திற்கு 15 நாட்களுக்கு பத்தாயிரம் கன அடி நீர் விடுவிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் வி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 10,000 கன அடி நீரை கர்நாடகா அரசு தொடர்ந்து விட்டு வருகிறது.

 

காவிரியில் உரிய நீரை திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்த சூழலில் இந்த நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா துணை முதலமைச்சர் வி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 10,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

கர்நாடகாவில் தற்பொழுது வறட்சிஎழுதுவதாகவும் எனவே தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்திற்கு 18,473 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

 

Right Menu Icon