குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஏழு அடி நீள மலைப்பாம்பு..!
சென்னையை அடுத்த வடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஏழு அடி நீளம் மலைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குளிர்காலம் என்பதால் பாம்புகள் உஷ்னமான இடம் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கும் தீயணைப்பு வீரர்கள் அவற்றுக்கு அருகே செல்லாமல் தன்னை நின்று கண்காணிக்கும் படி தங்களுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் இந்த வகை மலைப்பாம்பு இங்கு எப்படி வந்தது என வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





