பாம்பு கடித்த பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு..!
நாட்றம்பள்ளி அருகே பாம்பு கடித்த பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பள்ளியை சேர்ந்த ஒருவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவர் வீட்டின் பின் இருந்த விறகு கட்டையை எடுக்கும் பொழுது அதில் மறைந்து இருந்த நாக பாம்பு கடித்ததில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




