அரிவாளுடன் கெத்து காட்டிய ரவுடி..!
தொந்தரவு செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை தட்டி தூக்கிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. காசிமேடு பகுதியில் மதுபோதையில் நபர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக புகார் இருந்தது.
இதன் பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் ஆனந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அப்பொழுது அங்கு கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
போலீசாரின் விசாரணையில் அந்த நபர் காசிமேடு பகுதியைச் சேர்ந்த அஜித் என்பதும் அவர்சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





