பொள்ளாச்சி சம்பவத்தை மூடி மறைத்த அதிமுக..!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை மறைக்கவும் தங்களுக்கு அவசியமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி இவ்வாறு கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணை எந்தவித அடையாளங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்தனர். ஆனால் திமுக அரசு யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





