அடுத்தடுத்து வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!
கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி நின்றது. மூன்று சக்கர வாகனங்கள் சரக்கு வாகனம் இதில் சேதமாகின. பள்ளி மாணவியை அழைத்து சென்ற தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டனர். தப்பியோடிய ஓட்டுநர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





