ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது கொலை முயற்சி தாக்குதல்..!
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்ததாகவும் அதில் இருந்து புதின் தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதின் தனது காரில் இல்லத்திற்கு சென்ற பொழுது முன்னே சென்ற ஆம்புலன்ஸ் நின்றதாகவும் மேலும் புதின் காரின் முன்புற இடது பக்க சக்கரத்தில் சத்தம் கேட்டதாகவும் பின்பு அவரது காரில் இருந்து புகை வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிபர் விளாதிமிர் புதின் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





