நியூயார்க்கில் ஆடு மேய்க்கும் காவல் அதிகாரி..!
அமெரிக்காவின் நியூயார்க்கில் காவல் அதிகாரி ஒருவர் ஆடு மேய்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இன்று காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் சாலையில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் செல்வது போன்று உள்ளது.
அதன் பின்னர் மோப்பநாய் உடன் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஆடுகளை விரட்டி ஒரு வீட்டின் பின்புறம் உள்ள பகுதிக்கு அந்த அதிகாரி ஓட்டி செல்கிறார். இந்த வீடியோவில் உள்ள நாய் காணாமல் போன நபர்கள் வாகனங்கள் மற்றும் போதை பொருட்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.






