தொழில்வளர்ச்சியில் புதிய மைல்கல்: விஜய் முன்னிலையில் ரூ.18,600 கோடிக்கான 3 திட்டங்கள் கையெழுத்து
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசிற்கும் லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் மொத்தம் 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் மூன்று பிரம்மாண்ட புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதால், இது மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.





