பாரம்பரிய முறைப்படி தங்கை மகளுக்கு சீர் சுமந்து வந்த தாய்மாமன்..!
தாய்மாமன் உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மரபை தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களில் ஒன்று. நகரமயமாதல் நவீன வாழ்க்கை முறையில் மங்கி வரும் அந்த உறவு முறையை பாரம்பரிய முறையோடு நடத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் ராஜா. தங்கை மகள்கள் இருவரின் நீராட்டு முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தட்டுகளில் வரிசை வைத்து 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர் புடைசூழ கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கல்லுப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சீர் கொண்டு சென்றுள்ளார்.
விழா நடைபெற்ற விவசாய தோட்டத்தில் தென்னை ஓலையால் வேய்ந்த அழகுப் பொருட்களும், பாரம்பரிய ரக நெல் மணிகளை கொட்டி வைத்து சீர்வரிசை தட்டுளும் அளவுக்கு இருந்தது. பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகை கள் பரிமாறப்பட்டு மண்ணின் மணம் கமழ காங்கயம் காளைகளும் வெள்ளாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.






