--- --:--:-- --

பல பெண்களை திருமணம் செய்த நபர் மனைவியுடன் கைது..!

2

கோவையில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து பல பெண்களை திருமணம் செய்த நபர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். புதூரை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் மறைவுக்குப் பிறகு இரண்டாவது திருமணத்திற்காக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதை பார்த்த ராமு என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தான் சுங்கத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும் அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி அந்த பெண் ராமுவுடன் பழகிய நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

 

பணத்தை வாங்கிய பிறகு அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திய சந்தேகம் அடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அதிகாரிகள் போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி இருப்பதும் இதற்கு அவரது மனைவியும் உடந்தை என்பதும் தெரிய வந்ததால் இருவரையும் கைது செய்தனர்.

 

Right Menu Icon