--- --:--:-- --

நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் பத்திரமாக மீட்பு..!

3

விழுப்புரம் அருகே தரைப்பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

 

நீரில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் 2 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon