--- --:--:-- --

சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் கடனுதவி திட்டம்..!

01

சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய கடனுதவி திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவு துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகள் மேம்பாடு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது.

 

 

இதற்காக, நடப்பு ஆண்டில் மட்டும் சுய உதவி குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழு கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பல வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Right Menu Icon