--- --:--:-- --

ஒரு தலைக்காதல் – சிறுமியின் பெற்றோர் இளைஞனை கண்டித்ததால் சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு தப்பியோட்டம்..!

3

புதுச்சேரியில் ஒரு தலை காதல் விவகாரத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டு தலைமறைவான இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக மர்மநபர் காய்ச்சிய எண்ணெய்யை அவர் மீது ஊற்றிய தாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற இளைஞன் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அதனை சிறுமியின் பெற்றோர் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மாதேஷ் சிறுமியின் வீட்டின் அருகிலேயே எண்ணையை காய்ச்சி அவர் மீது ஊற்றி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon