பெண் புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய உலக சாதனை..!
பெல்ஜியம் நாட்டின் இரண்டு வயது பெண் புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் புறாக்களை கொண்டு பந்தயம் நடத்தப்படுவது பிரபலம்.
அந்நாட்டில் புறாக்களை வளர்க்கும் ஆர்வலர்கள் எண்ணிக்கை அதிகம். வளர்க்கப்படும் புறாக்களை பல்வேறு நாட்டிலிருந்து வந்து வாங்கி செல்வார்கள் . இதற்காக நடத்தப்படும் ஆன்லைன் ஏலத்தில் கியூனியம் என்ற 2 வயது பெண் புறா 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இது புதிய உலக சாதனையாகும். இதில் ஏலம் முடிய அரை மணி நேரம் இருந்த நிலையில் சீனாவை சேர்ந்த இரு பெரிய பணக்காரர்கள் கிம்மின் ஏலத் தொகையை கூடுதலாக உயர்த்தி கேட்டனர். இதன் முடிவில் கிம் 16 லட்சம் யூரோக்களுக்கு ஏலம் போனது.
இது இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச்சில் அர்பாண்டா என்ற ஆண்புறா அதிக ஏலம் எடுக்கப்பட்டது சாதனையாக இருந்தது. இதனை கியூனியம் பெண் புறா முறியடித்தது.







