--- --:--:-- --

துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

8

வடியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவள்ளூரை அடுத்த அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். 63 வயது முதியவரான இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

 

வழக்கம்போல் பட்டாபிராமன் காவல் நிலையம் அருகில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Right Menu Icon