தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு பொது முடக்கம்..!
கொரொனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் அற்ற முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தடங்கலுமின்றி மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று பத்தாவது வாரம் ஆகும். மருத்துவமனைகள் மருந்து கடைகள் பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றக்கடைகள் திறக்கப்படாத நிலையில் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே நடமாட கூடாது என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தால் வழக்கு பதியப் படும் என்றும் எச்சரித்துள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.







