--- --:--:-- --

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. !

2

விருதுநகர் அருகே ஓடும் காரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த நஸ்ரத் என்பவர் தனது நண்பருடன் காரில் சிவகாசிக்கு வந்துவிட்டு மீண்டும் பாலக்காடு நோக்கி சென்றுள்ளார்.

 

விருதுநகர் அருகே உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கார் தீ பிடித்ததுடன் நசரத் மற்றும் அவரது நண்பரும் காரை விட்டு உடனடியாக கீழே இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

 

Right Menu Icon