ஆப்கானில் 1500 பேருக்கு ஏற்பட்ட சோகம்..!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தென்கிழக்கில் கோஸ்ட் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐந்து மாவட்டங்களில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 1000 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மாயமாகியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மீட்புப் படை ஹெலிகாப்டர்களை கண்டதும் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்களோடு செல்லும் காட்சியும் வெளியாகியுள்ளது.
இதில் 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கம் தலைநகர் காபூலில் பாகிஸ்தான், இந்தியா எல்லை பகுதிகளில் உள்ள 500 கிலோமீட்டர் வரை உணரப்பட்டதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.






