கூண்டுக்குள் புகுந்த 2 பாம்புகள்… அச்சத்தில் அலறிய கிளிகள்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த உடையார்காலனி. வீட்டில் இருந்து கிளி கூண்டுகளில் புகுந்த இரண்டு பாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர். காலனி பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் 2 கூண்டுகள் எட்டுக்கு மேற்பட்ட கிளிகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த கூண்டுகளில் புகுந்த இரண்டு பாம்புகள் 4 கிளிகளை விழுங்கியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.






