--- --:--:-- --

எஜமானாரை காப்பாற்றி உயிரை இழந்த நாய்..!

3

ர்நாடகாவில் பண்ணை தோட்டத்திற்குள் புகுந்த நாக பாம்பை கடித்து கொன்று விட்டு வளர்ப்பு நாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் கிராமத்தை சேர்ந்தவர் ஷேகரப்பா. விவசாயியான அவர் தன் பண்ணை தோட்டத்தில் நாய்களை வளர்த்து வருகிறார்.

 

நேற்று மாலை அவர் வளர்ப்பு நாயுடன் தோட்டத்திற்குள் சென்றார். அங்கிருந்த நாகப்பாம்பை வளர்ப்பு நாய் கடித்து குதறியது. பாம்புக்கும், நாய்க்கும் கடும் சண்டை நடந்தது. நாயை பலமுறை பாம்பு கொத்தியது.

 

மோதலின் முடிவில் நாகப்பாம்பும் நாயும் இறந்தது. கால்நடை மருத்துவர்கள் நாயை காப்பாற்ற முயன்றாலும் முடியவில்லை. நாயைப் பார்த்து சேகரப்பா குடும்பத்தினர் அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon