--- --:--:-- --

அசாம் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக உயர்வு..!

2

சாம் மாநிலத்தில் கொட்டித்தீர்த்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது.

 

பருவம் தவறிய மழையால் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் தற்போதைய தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பாய்வதால் நூற்றுக்கும் அதிகமான லாரிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.

 

இந்த வகையில் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 43 ஆயிரம் ஹெக்டர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கின. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

 

Right Menu Icon