--- --:--:-- --

ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் ..!

6

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வரும் 14ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது.

 

அப்பொழுது பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் தீர்மானங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கைவெளியிட்டுள்ளனர்.

 

நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon