--- --:--:-- --

பாலியல் குற்றச்சாட்டில் தனியார் கல்லூரி சேர்மன் கைது..!

7

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலியல் குற்றச்சாட்டில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டார். ஆறு வாரங்களுக்கு முன்பு கல்லூரி சேர்மன் கல்லூரியை சேர்ந்த மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதாக கூறப்படும் காட்சி பரவியது.

 

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரி வாயிலில் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர் மேலும் சமரசம் செய்ய வந்த காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டார். தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்தை உடனடியாக திருப்பி தர வலியுறுத்தி பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் மாணவிகள் மற்றும் பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon