--- --:--:-- --

குழந்தை மீது ஏறி இறங்கிய கார்..!

6

நாமக்கலில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியதால் குழந்தை படுகாயமடைந்தது. நாமக்கலை சேர்ந்த கண்ணன் என்பவரின் இரண்டு வயது குழந்தை தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

 

அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று திரும்ப முயற்சித்த பொழுது குழந்தை மீது மோதி கீழே இறங்கியுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட கார் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு காரை நிறுத்தியுள்ளார்.

 

உடனடியாக குழந்தை மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிர்ச்சி சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon