மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம்..!
கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை உறுதி செய்ய யாரேனும் நியமிக்க வேண்டுமென்றும் போலீசாரின் தேவைகளை தர வேண்டுமென தெரிவித்துள்ளது. மூடிய நிலையில் இயங்கும் வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகளுக்கு வருகை தருபவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





