--- --:--:-- --

நபிகள் நாயகம் சர்ச்சை தொடர்பான போராட்டத்தில் இருவர் மரணம்..!

4

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பிரமுகரை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் இஸ்லாமிய மக்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக இஸ்லாமிய நாடுகள் இந்தியாவிற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நுபர் ஷர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

 

இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக முடிந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் இன்று உயிரிழந்ததால் பெரும் பதற்றமும் நிலவுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon