சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
பல சிகிச்சைகள் அளித்தும் இதுவரை குணமாகவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சிறப்பு பூஜை செய்தால் வயிற்று வலி குணமாகிவிடும் என 65 வயது பழனி என்பவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமிக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





