--- --:--:-- --

80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன்..!

5

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சத்தீஷ்கர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கிராமத்தில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. 11 வயது சிறுவன் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபொழுது பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலமாக ஆக்ஸிஜன் செலுத்தி நிலையை கண்காணித்து வருகின்றனர்.

 

இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon