கண்ணீர் விட்டு அழும் சிறுவனின் வீடியோ வைரல்..!
குழந்தைகளிடம் காணக்கூடிய அப்பாவிதனம் பெரும்பாலும் ஒப்பிட முடியாத ஒன்று. ஒருவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிடும். குழந்தைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களை மட்டும் செய்வார்கள். அதே சமயத்தில் அவர்கள் ஆசைப்படுவது கிடைத்து விட்டால் அதை ஒரு நிமிடம் கூட விட்டு விலக மாட்டார்கள்.
அது பொருளாக இருக்கலாம், ஒரு நபராக இருக்கலாம் அல்லது ஒரு உயிரினமாக கூட இருக்கலாம். இணையத்தில் இதுபோன்று குழந்தையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குழந்தை ஒன்றின் கை விரலின் மேல் வண்ணத்து பட்டாம்பூச்சி உட்கார்ந்தபடி தன் கைகளை அசைத்துக் கொண்டிருக்கிறது.
மகிழ்ச்சியில் கண்ணீர் விடுகிறான். அவனுக்கு வண்ணத்துப்பூச்சி மிகவும் பிடிக்கும் என எழுதப்பட்டுள்ளது. சிறுவன் தனக்கு மிகவும் பிடித்த வண்ணத்தை பட்டாம்பூச்சி தன் விரலில் உட்கார்ந்திருப்பதை ரசித்தபடி கண்ணீரை உடையால் துடைத்துக் கொள்கிறான். அவன் பட்டாம்பூச்சிக்கு சில முத்தங்களையும் கொடுக்கிறான்.






