அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடல்..!
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அதிமுக ஆட்சியின் பொழுது கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதற்காக தொடக்க கல்வித் துறையில் இருந்து ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த வகுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கை காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.





