ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து..!
ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. தமிழ்நாடு அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.
ஆனால் அந்த பதினைந்து நாட்களும் பணிக்கு வந்து இருந்தால் அதற்கான ஊதியத்தை பணமாக பெறும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்பு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத கல்வித்துறை ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





