வருங்கால கணவர் என பாராமல், கைது செய்த பெண் எஸ்.ஐ..!
அசாம் மாநிலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பண மோசடி செய்த வழக்கில் தனது வருங்கால கணவரின் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள நாகூர் என்ற நகரில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவருக்கும், ராணா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பெண்ணிடம் தான் அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி என கூறி அவரை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ராணா பண மோசடி செய்ததாக அவரிடம் சிலர் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
வருங்கால கணவர் என பாராமல் அவரை கைது செய்த உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.





