ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளைவிட்டு விலகினாரா..?
ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ளது. அதிபர் புதினின் உடல்நிலை குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான கலந்துரையாடலின்போது டேபிளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி அவரது உடல்நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளைக் கிளப்பின. ஏற்கனவே புற்றுநோய் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





