மளிகை கடையை திறந்த போது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!
ஈரோடு அருகே மளிகை கடையை திறந்தபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கரும்பாறை வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் வெளியூருக்கு சென்று விட்டதால் அவர்களின் மளிகை கடையை சரண்யா திறக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.





