குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பல்லி இறந்து கிடந்ததாக புகார்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படும் நிலையில் உணவருந்திய 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன.
திருவள்ளூர் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்ட பின்பு உணவில் பல்லி இறந்து கிடந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பீதியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தைகளை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





