--- --:--:-- --

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய 3 வீரர்கள்..!

3

சீனாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற மூன்று வீரர்கள் 6 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். டியான்கா என்ற விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி சென்சு 13 என்ற விண்கலம் மூலம் மூன்று வீரர்கள் சென்றனர்.

 

அவர்கள் விண்வெளி நிலையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். 6 மாதம் நிறைவடைந்த நிலையில் மூன்று பேரும் மங்கோலியா பகுதியில் பத்திரமாக தரையிறங்கினர்.

 

ஏற்கனவே ஏழு முறை விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்பியுள்ள நிலையில் எட்டாவது முறை சென்ற இந்த மூன்று பேரும் அதிக நாட்கள் தங்கி இருந்தது குறிப்பிடதக்கது.

 

Right Menu Icon