--- --:--:-- --

பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர்..!

2

பெரம்பலூரில் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர் அந்த வீடியோவை வைத்து பெண்ணின் மகளை இச்சைக்கு இணங்குமாறு கூறி மிரட்டியதாக போலீசில் சிக்கி இருக்கிறார். கீழ கணவாய் பகுதியை சேர்ந்த செல்வத்திற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன.

 

வக்கிரபுத்தி கொண்ட செல்வம் பெண் ஒருவர் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டி அது மட்டுமல்லாமல் அவரது மகளையும் தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறு கூறியிருக்கிறார்.

 

செல்வத்தின் மிரட்டலுக்கு அடிபணிய அந்த பெண் புகார் அளித்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார் உடனடியாக செல்வத்தை கைது செய்தனர். செல்வத்தின் இந்த செயலுக்கு அக்கா முறை கொண்ட அவரது உறவுக்காரப் பெண்ணான மலர்கொடி உடந்தையாக இருந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon