பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெய்த கனமழை காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது .திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் புத்தாண்டையொட்டி காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் மாலை 6 மணியளவில் அந்த பகுதியில் மிக கனமழை பெய்ததையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து கீழே பெருக்கெடுத்து வந்த காற்றாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்து கொண்டது. இதன் காரணமாக கோயில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன.





