--- --:--:-- --

மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு..!

7

கொரொனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தனியார் பள்ளிகளில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டால் பள்ளிகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரொனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

திங்கட்கிழமை 150 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு 0.2 சதவீதத்தில் இருந்து 2.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் உயிரிழப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. கொரொனா பரவலால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon