--- --:--:-- --

திடீர் பள்ளத்தில் தலைகுப்புற விழுந்த 5 பேர்..!

3

ராஜஸ்தானில் பாதாளசாக்கடை கான்கிரீட்உடைந்து உருவான திடீர் பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தலைகுப்புற விழுந்து 5 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். பஞ்சர் கடையின் முன்பு நான்கு பேர் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பழுதை நீக்கி கொண்டிருந்தார்.

 

அப்பகுதியில் திடீரென பாதாள சாக்கடையின் கான்கிரீட் சேதமடைந்து பள்ளம் உருவானதால் இரு சக்கர வாகனத்துடன் 5 பேரும் உள்ளே விழுந்தனர். அனைவரும் சிறு காயங்களுடன் தப்பிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon