--- --:--:-- --

இனி ரேஷன்கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை..!

2

ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் ஆவின் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

பால்வளத் துறை, மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கைகள் மீதான உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் மற்றும் கால்நடைத்துறை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பதிலுரை அளித்தனர்.

 

பின்னர் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சென்னை வளசரவாக்கத்தில் ஆவின் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் எழுபத்தி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால் மையம் அமைக்கப்படும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பால் பொருட்கள் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இணைய வழியில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். ஆவின் பால் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Right Menu Icon