கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 படிப்புகளை முழு நேரமாக படிக்க அனுமதி..!
கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை முழு நேரமாக படிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு இளங்கலை பட்டப் படிப்புகள் அல்லது முதுகலை பட்டப் படிப்புகளை வகுப்பறைக்கு சென்று படிக்க முடியும் எனவும் ஒரே நேரத்தில் ஒரு பட்டப்படிப்புடன் பட்டயப்படிப்பை சேர்ந்து படிக்க முடியும் எனவும் எனவே இரு படிப்புகளுக்கான வகுப்பறை நேரங்களும் வெவ்வேறாக இருக்கிறதா என்பதை மாணவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறுபட்ட கல்வி கலை பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய தேசிய கொள்கையை அனுசரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.





