கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை..!
கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக், வாசுதேவன் என்பவர் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு மேலாண்மை துறை பயின்று வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் கார்த்திக் கொல்லப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று கார்த்திக்கின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கார்த்திக்கின் மனைவிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.





