--- --:--:-- --

இனி வாராந்திர தடுப்பூசி முகாம் இல்லை..!

1

மிழகம் முழுவதும் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது எனவும் தேவைப்படும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாமை நடத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுக்கும் வகையில் வாரம்தோறும் மிகப்பெரிய அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை மருத்துவத்துறை நடத்தி வந்தது.

 

தொடக்கத்தில் வாரம் ஒரு முறையும் பின்னர் இரு முறையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றின் மூலம் மட்டுமே நான்கு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 

தற்பொழுது கொரொனா தாக்கம் குறைந்து இருக்கும் நிலையில் வாரம் தோறும் நடத்தும் முகாமை நிறுத்துவதாக கூறிய மருத்துவத்துறை, தேவைப்படும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாமை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

 

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரொனா தடுப்பூசிகளை வழக்கம்போல செலுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் முதல் தடுப்பூசியை 49 லட்சம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி ஒரு கோடியே 37 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில் 3292 கிராம பஞ்சாயத்துக்கள், 121 நகராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

Right Menu Icon