உணவகத்தில் பரோட்டா சால்னாவில் இருந்த புழு..!
நெல்லை மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எதிரே உள்ள உணவகத்தில் கொடுக்கப்பட்ட சாம்பாரில் புழு இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை எதிரே உள்ள உணவகத்தில் நோயாளிகளின் உறவினர்கள் உணவருந்துவது வழக்கம்.
அந்த பகுதியில் இன்று வழக்கம் போல் உறவினர்கள் உணவை உண்ணும் போது புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வைத்திருந்த சால்னா மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த குடிநீர் ஆகியவற்றை உடனடியாக கீழே கொட்டி அழித்தனர். மேலும் கடைகளை ஒரு நாள் முழுவதும் மூட உத்தரவிட்டனர்.





