--- --:--:-- --

தென்னிந்திய படங்கள் பற்றி கேவலமாக பேசினாரா ராஷி கண்ணா..?

11

டிகை ராசி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் அதிகம் வாய்ப்புகள் கிடைப்பதால் பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார்.தென்னிந்திய படங்களில் பெண்களை மோசமாக காட்டுவார்கள் என அவர் கூறியதாக ஒரு பேட்டி சமீபத்தில் வைரல் ஆனது.

 

“மில்கி பியூட்டி, lass என ஹீரோயின்களை அழைப்பார்கள். ஒன்று கிளாமர் doll ஆக இருக்க வேண்டும், அல்லது நன்றாக நடிக்க வேண்டும். இந்த இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது என நினைப்பார்கள். நான் அதிகம் அழகாக இருக்கிறேன் என கூறி என்னை பல படங்களில் நிராகரித்து இருக்கிறார்கள்” எனவும் அவர் கூறி இருந்தார்.

 

ராஷி கண்ணா தென்னிந்திய படங்கள் பற்றி இப்படி பேசியது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. அவருக்கு எதிராக அதிகம் பேர் கருத்து கூறி வரும் நிலையில், ராசி கண்ணா தற்போது தன் பேட்டி பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

 

“நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு வேறு விதமாக சிலர் சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்புகிறார்கள். அவர்கள் தயவு செய்து உடனே நிறுத்துங்க. நான் நடிக்கும் அனைத்து மொழி/படங்கள் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது” என ராசி கண்ணா குறிப்பிட்டு உள்ளார்.

Right Menu Icon