ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!
மகாராஷ்டிராவில் பவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஜெயநகர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது நாசிக் அருகேசென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக 11 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இதுகுறித்து தகவலறிந்து சுற்று வட்டார மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




